You are here

கேட்டலோனியா தலைவரைக் கைது செய்ய ஆணை பிறப்பித்தது ஸ்பெயின்

மாட்ரிட்: பதவியிலிருந்து நீக்கப் பட்ட கேட்டலோனியா தலைவர் பியூக்டிமோண்டையும் அவரது நண்பர்கள் நால்வரையும் கைது செய்ய ஸ்பெயினில் நீதிபதி ஒருவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த ஐந்து பேரும் மாட்ரிட் நகர உச்சநீதிமன்ற விசார ணைக்கு வரத் தவறியதையடுத்து அவர்களைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வட்டார அரசாங்கத்தைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்க ளான இதர ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு போலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பிணை யில் விடுவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கிளர்ச்சியில் ஈடுபட்டது, தேச துரோகம், அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் கள் எதிர்நோக்குகின்றனர். சட்ட ஆலோசனை நாடி தற்போது பெல்ஜியம் சென்றுள்ள பியூக்டிமோண்ட், நியாயமான விசாரணை நடைபெறும் என்று தனக்கு உத்தரவாதம் அளித்தால் மட்டுமே நாடு திரும்பப்போவ தாகவும் இல்லையென்றால் ஸ்பெயின் நாட்டுக்கு திரும்பிவரப் போவதில்லை என்றும் கூறியுள் ளார்.