You are here

ஊட்டச்சத்து பிரச்சினையால் பாதிக்கப்படும் மில்லியன் கணக்கான மக்கள்

லண்டன்: இன்றைய உலகில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும் ஊட்டச்சத்து பிரச்சினை உள்ளது. அளவுக்கு அதிகமாக உணவு உண்பதால் உடல் பருமன் அதிகரிப்பது அல்லது ஊட்டச் சத்து குறைவால் உலகில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதாக நேற்று வெளியான முக்கிய ஆய்வு ஒன்று கூறுகிறது. சுமார் 140 நாடுகளில் மேற் கொண்ட ஆய்வுகளில் இந்த உண்மை தெரியவந்ததாக உலக ளாவிய ஊட்டச்சத்து அறிக்கையை வெளியிட்ட ஆய்வாளர்கள் கூறி னர். ஊட்டச்சத்து பிரச்சினை மொத்தத்தில் மனித வளர்ச்சி யின் வேகத்தை மட்டுப்படுத்து கிறது என்று கூறும் ஆய்வாளர் கள், உலகளாவிய இந்த சுகாதார மிரட்டலுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்படுபவர்களின் எண் ணிக்கை குறைந்து வந்த போதி லும் அனைத்துலக ரீதியில் இணக்கம் காணப்பட்ட வரம்பை எட்டுவதற்கு இந்த வேகம் போதாது என்று ஆய்வாளர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள் ளனர். 2030ஆம் ஆண்டுக்குள் எல்லாவிதமான ஊட்டச்சத்து குறைபாடுகளையும் முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் இணக்கம் கண்டுள்ளன. ஐந்து வயதுக்கும் குறைந்த சுமார் 155 மில்லியன் குழந்தை கள் உட்டச்சத்தின்மையால் பாதிக் கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.