You are here

கங்கை ஆற்றில் புனித நீராடல்: நெரிசலில் 3 பெண்கள் பலி

பாட்னா: கார்த்திகை பௌர் ணமியை முன்னிட்டு பீகாரின் கங்கை நதியில் புனித நீராடலுக் காக மக்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் ஏற்பட்ட நெரிசலில் மூவர் உயிரிழந்தனர். இந்தியாவின் வடமாநிலங் களில் ‘கார்த்திக் பூர்ணிமா’ எனும் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி பீகார் மாநிலத்தின் பெகுசாராய் மாவட் டத்தில் உள்ள சிமாரியா என்னும் புனித தளத்தில் கங்கை நதியில் நீராடுவதற்காக ஆயிரக்கணக் கான மக்கள் கூடினர். அதன்பின் தெய்வ வழிபாட்டிற் காக கோயிலுக்கு செல்லும் வழி யில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டவர்கள் இந்தச் சம்பவத்தில் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர்.

இந்தக் கூட்ட நெரிசல் வதந்தி யின் காரணமாக ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இச்சம்ப வம் குறித்து பேசிய மூத்த போலிஸ் அதிகாரி, “கூட்டம் கட்டுக்குள் இருந்ததாகவும் அப் பெண்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறுவது சிரமம் என்று எண்ணி, ஒருவரை ஒருவர் முண் டியத்துக் கொண்டு வெளியேற முயன்றதால் இவ்வாறு நேர்ந்திருக் கலாம்,” என்றார். இந்தச் சம்பவத்தில் பலியான வர்களின் குடும்பங்களுக்குத் தலா 4 லட்ச ரூபாய் நிதியுதவியை அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.