You are here

திருநாவுக்கரசர்: துன்பங்களையும் அழுகையையும் உண்டாக்கும் பாஜக

சென்னை: மக்களுக்கு துன்பங்களையும் அழுகையையும் உண் டாக்கும் கட்சியாக பாஜக விளங்குகின்றது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார். அதே வேளை யில் எப்போதும் மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடும் காங்கிரஸ், மக்களுக்கு நெருக்கமான கட்சியாக உள்ளது என செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார். “பிரதமர் மோடி மக்களை விட்டுவிட்டு வெளிநாடுகளுக்குப் பயணம் சென்ற வண்ணம் உள்ளார். மத்திய அரசோ ஜிஎஸ்டி என்ற பெயரில் கந்துவட்டியைவிட, மக்களிடம் இருந்து அதிக வட்டி வசூலித்து வருகின்றது,” என்றார் திருநாவுக்கரசர். காங்கிரஸ் கட்சியைச் சிரிப்பு சங்கம் என்றும் மக்களிடம் இருந்து விலகி உள்ளது என்றும் பிரதமர் மோடி அண்மையில் விமர்சித்திருந்தார்.