You are here

அனுமதியற்ற தொலைதூர கல்வி; மாணவர்களின் பட்டங்கள் ரத்து

புதுடெல்லி: தமிழகம் உட்பட இந் தியாவில் உள்ள மூன்று நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் அனு மதி பெறாமல் வழங்கிய தொலைத் தூர கல்வி மூலம் பொறியியல் படிப்பு முடித்த மாணவர்களின் பட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள் ளன. நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களின் தொலைதூர கல்வித் திட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய குழு தீர்ப்பு வழங்கியது. அப்போது, உதய்பூரின் ஜே.ஆர். என். ராஜஸ்தான் வித்யா பீட், ராஜஸ்தானில் உள்ள இன்ஸ் டீடியூட் ஆஃப் அட்வான்ஸ்ட் ஸ்டடிஸ் இன் எஜூகேசன், தமி ழகத்தில் உள்ள விநாயகா மி ஷன்ஸ் ரிசர்ச் பவுண்டேசன் ஆகிய நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களில் 2001ஆம் ஆண்டு முதல் தொலை தூர கல்வி மூலம் பொறியியல் பட்டம் பெற்ற மாண வர்களின் பட்டங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தர விட்டது.

மேலும் இந்த 4 நிறுவனங் களுக்கும் வழங்கப்பட்ட ஒப்புதல் குறித்து சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர “நாட்டின் அனைத்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களும் சம்பந்தப்பட்ட யுஜிசி எனும் ஒழுங்கு ஆணையத்திடம் உரிய அனுமதி பெற்றே 2018–19ஆம் ஆண்டுக்கான தொலை தூர கல்வித் திட்டத்தைத் தொடர வேண்டும். “இல்லையெனில் அவை தடை செய்யப்படும். இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கல்வி மையங்களை முழுமையாக உரிய அதிகாரிகள் ஆய்வு செய்து அதன் பிறகே அனுமதி வழங்க வேண்டும்,” எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டது.