You are here

தூய்மைக்கு முக்கியத்துவம்

தூய்மையான, குப்பைகள் குறைந்த சமூகத்தை உருவாக்க சிங்கப்பூரர் கள் தங்களது அன்றாட வாழ்க் கையில் முழு ஈடுபாட்டுடன் நடந்துகொள்வது அவசியம் என்று துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள் ளார். ஏராளமான மரங்கள் மற்றும் நீர்வழிகளுடன் கூடிய பூங்கா நகராக உருவெடுக்க சிங்கப்பூர் பெரிய அளவில் பாடுபட்டதாக அவர் குறிப்பிட்டார். இருப்பினும் தூய்மைக்கு முக் கியத்துவம் கொடுத்துப் பேசிய திரு தர்மன், “தொடக்கமாக 20 முதல் 30 ஆண்டுகள் கடந்த பின்னர் நமது பழக்கவழக்கங்கள் பலவற்றில் நாம் இன்னும் முன் னேற்றம் காணவில்லை,” என்றார்.

“இன்றைக்கு நாம் 50,000 துப்புரவாளர்களைச் சார்ந்திருக்கி றோம். சமூக நடவடிக்கைகள், சுற்றிச் சென்று குப்பைகளை எடுக்க உதவும் தொண்டூழியக் குழுக்கள் போன்றவற்றையும் நாம் பெற்றிருக்கிறோம். “ஆனால், இவை எல்லாம் நமது பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது. தீர்வுக்கு ஒரே வழி நமது பழக்கவழக்கங்கள். அவை மாறவேண்டும். நமது அண்டை வீட்டாரின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும். “அதேபோல நமது சக குடிமக் களின் நலனையும் மனதில் கொண்டு நடக்க வேண்டும். பொது உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

இவற்றைத் தான் சிங்கப்பூர் கொண்டிருக்க வேண்டும்,” என்றார் துணைப் பிரதமர் தூய்மை நடவடிக்கைகளில் மாணவர்கள் பங்கேற்கும் வகை யிலான கல்வி அமைச்சின் நட வடிக்கை இவ்வாண்டில் தொடங்க உள்ளதை பொதுமக்களின் அதிக ஈடுபாட்டுக்கு நல்லதோர் உதாரணமாக அவர் சுட்டினார். தூய்மை, பசுமை சிங்கப்பூர் என்னும் சுற்றுச்சூழல் பிரசாரத் தின் ஒரு பகுதியாக வருடாந்திர தூய்மை, பசுமை கேளிக்கை நிகழ்ச்சி பூன் கெங் எம்ஆர்டி நிலையத்தை அடுத்துள்ள திறந்த வெளியில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய திரு தர்மன், 30 மீட்டர் உயரம் வரை வளரக் கூடிய மரம் ஒன்றை நட்டார். பொதுத் தூய்மை, வளத்தைப் பாதுகாத்தல், எரிசக்தி ஆற்றல் போன்றவற்றை நிலைநாட்டுவதில் பங்கெடுத்த எட்டு அடித்தள அமைப்புகளுக்கு விருதுகளையும் அவர் வழங்கினார்.

வருடாந்திர தூய்மை, பசுமை பிரசார நிகழ்வில் மரம் ஒன்றை துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் நட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்