You are here

பெரும் உயிருடற்சேதத்தைச் சமாளிக்க பயிற்சி ஒத்திகை

  • படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இங் டெங் ஃபோங் பொது மருத்துவ மனை அடுத்த ஆண்டு முதல் பாதியில் தனது ‘பெரும் உயிருடற்சேத சம்பவப்’ பயிற்சியை முதல் முறையாக நடத்தவிருக்கிறது. அந்தப் பயிற்சிக்கான முழு ஒத்தி கைகளை மருத்துவமனை இப்போது நடத்திவருகிறது. இந்த மூன்று முழு ஒத்திகைகளில் முதல் ஒத்திகை செப்டம்பரில் நடந்தது. இரண்டாவது ஒத்திகை நேற்று இந்த மருத்துவ மனையில் நடத்தப்பட்டது. மருத்துவமனையின் ‘சி’ புளோக் கில் சக்கர நாற்காலிகளில் பலரையும் சிகிச்சைக்காகக் கொண்டுவந்தனர். இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு நிலவியது. காயம் அடைந்தவர்கள் மருத்துவ வாகனத் தில் வந்தனர்.

அவர்களை மருத்துவர் களும் தாதியர்களும் அவசரகால ஊழியர்களும் கையாண்டு ஸ்கேன் படங்களை எடுத்து தேவையான பல சிகிச்சைகளையும் அளித்தனர். இத்தகைய ஒரு பயிற்சியை நேற்று அந்த மருத்துவமனை நடத்தியது. இங் டெங் ஃபோங் பொது மருத் துவமனை மற்றும் ஜூரோங் சமூக மருத்துவமனையின் தலைமை செய லாக்க அதிகாரி இங் கியான் சுவான் இதுபற்றி தெரிவித்தபோது, “பெரும் உயிருடற்சேத சம்பவங்கள் நிகழ்ந் தால் அவற்றைச் சமாளிக்க தயார் நிலையில் நாம் இருக்கவேண்டும்,” என்றார். “தொழில்துறை விபத்துகளாக இருந்தாலும் பயங்கரவாத சம்பவங் களாக இருந்தாலும் எதையும் சமாளிக்கக்கூடிய தயார் நிலையில் நாம் இருக்கவேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் நேற்று நடந்த பயிற்சி ஒத்திகையின்போது கதிரியக்க சிகிச்சை குழுவினர் ‘பாதிக்கப்பட்ட ஒருவரை’ சோதிக்கிறார்கள். சிகிச்சை பெறுவதற்கு முன் இவருக்கு கதிரியக்க ஆபத்து இல்லை என்பதை உறுதிசெய்யும் நோக்கத்தில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்