You are here

தங்க நகைகளுக்கு ‘ஹால்மார்க்’ முத்திரை கட்டாயமாகும்

புதுடெல்லி: கடைகளில் விற்கப் படும் தங்க நகைகளின் தரத்தை உறுதிப்படுத்துவதற்காக ‘ஹால் மார்க்’ முத்திரை இடம்பெறுவது விரைவில் கட்டாயமாக்கப்படவுள் ளது. இது குறித்து இந்திய அரசு அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோக் ஜனசக்தியைச் சேர்ந்த மத்திய உணவு, நுகர்வோர் விவ காரத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், “மக்கள் வாங்கும் தங்கத்தின் தரத்தை உறுதி செய்வது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது,” என்றார். “நகைக் கடைகளில் விற்கப் படும் தங்க நகைகளின் தரம் குறித்து வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்வது அவசியம். “இதையொட்டி ‘ஹால்மார்க்’ முத்திரையிடப்பட்ட நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண் டும் என்று விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும்,” என்று அமைச் சர் தெரிவித்தார்.

தற்போது சில கடைகளில் ‘பிஐஎஸ்’ முத்திரையிட்ட நகைகள் விற்கப்படுவது குறித்துப் பேசிய திரு ராம்விலாஸ் பஸ்வான், அவற் றில் தங்கத்தின் தரம் குறித்த போதுமான அம்சங்கள் இல்லை என்று குறிப்பிட்டார். “இதன் காரணமாக ‘ஹால் மார்க்’ முத்திரை கட்டாயமாக்கப் படுகிறது. நகைகளின் தரத்திற்கு ஏற்ப 14, 18, 22 காரட் தங்க நகை களுக்கு ‘ஹால்மார்க்’ முத்திரை வழங்கப்படும். இந்த நடைமுறை 2018 ஜனவரிக்குள் அமல்படுத்தப் படும் என்றும் அமைச்சர் தெரி வித்தார்.