You are here

சச்சின் பைலட்: இமாசலப்பிரதேசத்தில் மோடி ஜாலம் எடுபடாது

சிம்லா: இமாசலப்பிரதேச மாநிலத் தில் பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும் தீவிர பிர சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மாநிலத்தில் இம்மாதம் 9ஆம் தேதி தேர்தல் நடைபெறு கிறது. பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித்ஷா உட்பட மாநிலத் தலை வர்கள் தேர்தல் களத்தில் வாக்கு களைக் கைப்பற்றும் நடவடிக் கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் அக்கட்சியைச் சேர்ந்தவர்களும் தீவிர பிரசாரத் தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே இமாசலப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், “மோடி மேஜிக் இங்கு எடுபடாது,” என்றார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக முன்னாள் முதல்வர் பிரேம்குமார் துமாலை முதல்வர் வேட்பாளராக பாஜக அறிவித் துள்ளது. கடந்த 2012ல் முதல்வர் வேட்பாளரான பிரேம்குமார் துமால் தலைமையில் பாஜக தோல்வி அடைந்தது. பணம் மதிப் பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்ற னர். பாஜக தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்க சிபிஐயை பயன்படுத்தி வருகிறது,” என்றும் தெரிவித்தார்.