You are here

விசாரிக்க வந்த போலிஸ் கார் மீது வாகனம் மோதியது

விரைவுச்சாலையில் நிகழ்ந்த விபத்து குறித்து விசாரிக்க வந்த போலிஸ் கார் மீது மற்றொரு கார் மோதியதால் பலர் அதிர்ச்சியடைந் துள்ளனர். இதில் காவல்துறையினர் யாரும் காயம் அடையவில்லை. சாங்கியை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச் சாலையில் நேற்றுக் காலை மூன்று வாகனங்கள் மோதிய விபத்து நிகழ்ந்தது. கட்டுப்பாட்டை இழந்த டாக்சி, வலது பக்க தடத்தில் வந்த காரின் மீது மோதியது. இதையடுத்து கார் மற்றொரு வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் காயம் அடைந்த டாக்சி ஓட்டுநருக்குத் தலைசுற்றலும் முதுகு பக்கத்தில் வலியும் இருப்பதாகக் கூறியதால் அவர் டான் டோக் செங் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து காலை 5.25 மணிக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போக்குவரத்து போலி சார் சம்பவ இடத்துக்கு விரைந்த னர். அங்கு வந்த போலிசார், போலிஸ் வாகனத்தை விபத்தில் சிக்கிய வாகனங்களின் பின்பக்கத் தில் நிறுத்தினர். அப்போது போலிஸ் கார் மீது மற்றொரு வாகனம் மோதியது.