You are here

அகதிகளை ஏற்க முன்வந்த நியூசிலாந்தின் கோரிக்கையை நிராகரித்தது ஆஸ்திரேலியா

சிட்னி: பாப்புவா நியூகினியில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாமி லிருந்து அகதிகள் 600 பேர் வெளியேற மறுத்து வரும் நிலையில் அவர்களில் 150 பேரை ஏற்றுக் கொள்ள நியூசிலாந்து முன்வந்துள் ளது. நியூசிலாந்தின் இந்த கோரிக்கையை ஏற்க ஆஸ்திரேலியா மறுத்துவிட்டது. ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் இதனைத் தெரிவித்தார். சிட்னியில் திரு டர்ன்புல்லும் நியூசிலாந்து பிரதமர் திருமதி அர்டெர்னும் பேச்சு நடத்திய பின்னர் நியூசிலாந்தின் தற்போதைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ள ஆஸ் திரேலியப் பிரதமர் மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

ஆஸ்தி ரேலியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைய படகுகள் மூலம் வரும் அகதிகளை ஏற்க ஆஸ்திரேலியா மறுத்து வருகிறது. அவ்வாறு வரும் அகதிகள் பாப்புவா நியூகினி மற்றும் நவ்ரு தீவில் உள்ள தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப் படுகின்றனர். இந்நிலையில் மனுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம் மூடப்பட்ட நிலையில் அங்கிருந்து அகதிகள் வெளியேற மறுத்து வருகின்றனர்.