You are here

‘தேர்தலில் பிரிவினைவாதக் கட்சிகள் ஒன்றுசேர வேண்டும்’

மாட்ரிட்: வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கேட்டலோனிய தேர்தலில் பிரிவினைவாதக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர வேண்டும் என்று கேட்டலோனியா முன்னாள் தலைவர் கார்லஸ் பியூடிக்மோண்ட் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஸ்பெயின் நாட்டுப் பொருளியலில் முக்கிய பங்கு வகிக்கும் மாநிலம் கேட்டலோனியா. இங்கு தனிநாடாக பிரிவது தொடர்பான வாக்கெடுப்பு கடந்த மாதம் முதல் தேதி நடந்தது. இதில் பங்கேற்ற 2.3 மில்லியன் மக்களில் 90% பேர் தனிநாடாக கேட்டலோனியா பிரிந்து செல்வதற்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த மாதம் 27ஆம் தேதி ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றதாக கேட்டலோனியா நாடாளு மன்றம் அறிவித்தது.

கேட்டலோனியா சுதந்திர பிரகடனம் செய்த சில மணி நேரங்களில் நாடாளுமன்றத்தைக் கலைத்து, நேரடி நிர்வாகம் அமல்படுத்தப்படுவதாக ஸ்பெயின் அரசு அறிவித்தது. கலைக் கப்பட்ட கேட்டலோனியா நாடாளு மன்றத்திற்கு டிசம்பர் மாதம் மறு தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவித் துள்ளது. இதற்கிடையே, பிரிவினை வாத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி கேட்டலோனியா தலைவர் கார்லஸ் பியூடிக்மோண்ட் உள்ளிட்ட 5 பேர் மீது ஸ்பெயின் நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. விசார ணைக்கு முன்னிலையாகாத பியூடிக் மோண்ட் உட்பட 5 பேருக்கு நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது. . இந்நிலையில், தேர்தல் தொடர்பாக பியூடிக்மோண்ட் டுவிட்டரில், நியாய மான விசாரணைக்கு உத்தரவாதம் அளிக்கும் வரை ஸ்பெயினுக்குத் திரும்பி வரப்போவதில்லை என்றும் நீதிமன்றத்தால் தேடப்பட்டு வரும் நிலையிலும் தேர்தலில் போட்டியிடத் தான் தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.