You are here

அமைச்சரை விசாரியுங்கள்: அதிமுக எம்எல்ஏ வலியுறுத்து

கடலூர்: தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தொழிலாளர்களின் நலனில் சிறிதும் அக்கறையின்றிச் செயல்பட்டு வருவதாக அதிமுக எம்எல்ஏ கலைச்செல்வன் குற்றம் சாட்டி உள்ளார். ஆளுங்கட்சி உறுப்பினரே அமைச்சர் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டி இருப்பது அதிமுக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்ப டுத்தி உள்ளது. அமைச்சர் சம்பத் ஓர் ஊழல் பேர்வழி என்றும், அவரிடம் விசா ரணை நடத்த வேண்டும் என்றும் விருத்தாச்சலம் தொகுதி எம்எல்ஏ வான கலைச்செல்வன் வலியுறுத்தி உள்ளார்.

நேற்று முன்தினம் செய்தியாளர் களிடம் பேசிய அவர், நெய்வேலி நிலக்கரி நிறுவன நிர்வாகம் ஐந்து விழுக்காடு பங்குகளைத் தனியா ருக்கு விற்பனை செய்ய முயற்சி செய்து வருவதாகப் புகார் எழுப்பினார். “இதனால் என்எல்சியில் பணி புரிந்து வரும் 25 ஆயிரம் தொழி லாளர்களின் குடும்பங்கள் பெரி தும் பாதிக்கப்படும். இதுகுறித்து, தொழில்துறை அமைச்சரான எம்.சி. சம்பத் சிறிதும் கவலைப் படவில்லை. “தொழிலாளர்களின் நலனில் அவருக்கு அறவே அக்கறை இல்லை. இதுதான் நிதர்சனமான உண்மை,” என்றார் எம்எல்ஏ கலைச்செல்வன்.