You are here

தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வினாடி, வினா நிகழ்ச்சி

கரூர்: வினாடி வினா நிகழ்ச்சி மூலம் மாணவர்கள் மத்தியில் தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி தொடங்கியுள்ளது. இது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். “இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி எதிர்கால வாக்காளர்களான 14 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட, குறிப்பாக ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்படும்,” என அவர் அறிவித்துள்ளார். முதலில் மாவட்ட, மாநில அளவிலும், பின்னர் தேசிய அளவிலும் இந்தப் போட்டி நடைபெற உள்ளது.