You are here

தொண்டமான் பெயர் நீக்கம்: திருமாவளவன் கண்டனம்

சென்னை: இலங்கையில் மலையகப் பகுதிகளில் தமிழரின் அடையாளத்தை மெல்ல மெல்ல அழிக்கிற உள்நோக்கம் கொண்ட சதி முயற்சி நடைபெறுகிறதோ எனும் சந்தேகம் எழுகிறது என திருமாவளவன் கூறியுள்ளார். தற்போது மலையகத்தில் தமிழர்களின் அடையாளங் களை, வரலாற்றுச் சுவடு களை அழிப்பதை வேடிக்கை பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித் துள்ளார். “இலங்கையில் தமிழர்க ளின் பாதுகாவலராக விளங்கிய தொண்டை மானின் பெயர்களை அரசு கட்டடங்கள், நிறுவனங் களில் இருந்து நீக்கியதை ஏற்க இயலாது. “சிங்கள ஆட்சியாளர் களின் இந்த நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழர்களுக்காக இறுதி மூச்சு வரை பாடுபட்ட தொண்டமானை அவமதிப் பதாக இந்நடவடிக்கை அமைந்துள்ளது,” என திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஆட்சியாளர்களின் இத்தகைய நடவடிக்கையை இந்திய அரசு உடனடியாகக் கண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், தொண்டமான் பெயரை மீண்டும் அரசு நிறுவனங்களுக்கு சூட்ட வேண்டுமென சிங்கள அரசை இந்திய பிரதமர் வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.