You are here

சிங்கப்பூர் பாடலாசிரியர்கள், கலைஞர்கள் படைப்பில் பள்ளிகளில் பாடப்பட உள்ள 12 புதிய பாடல்கள்

  • தலைமை முதன்மை ஆசிரியர் எஸ்.பி. ஜெயராஜதாஸ் பாண்டியன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரைச் சேர்ந்த ஏழு கல்வி யாளர்களும் 12 கலைஞர்களும் முதல்முறையாக ஒன்றிணைந்து பள்ளி மாணவர்களுக்காகப் புதிய பாடல்களைப் படைத்துள்ளனர். அவர்களில் கலாசாரப் பதக்கம் வென்ற கெல்லி டாங்கும் லியோங் வெர்ன் ஃபூக்கும் அடங்குவர். புனையப்பட்ட 12 புதிய பாடல்கள் சிங்கப்பூர் வாழ்க்கையில் பல்வேறு அம்சங்களைப் பற்றி எடுத்துரைக்கும். இவை பள்ளிகளில் இசை கற்றல், கற்பித்தலுக்கு உதவும். ‘டி தஞ்சோங் காத்தோங்’ எனும் மலாய்ப் பாடல், ‘முன்னேறு வாலிபா’ எனும் தமிழ்ப் பாடல் போன்றவை பல ஆண்டுகளாகப் பள்ளிகளில் பாடப்பட்டு வரு கின்றன. அந்த வரிசையில் தற்போது பள்ளிகளில் பாடப்படும் சமூகப் பாடல்கள் பட்டியலில் இப்புதிய பாடல்களும் சேர்க்கப்படும். ‘ஸ்டோரிஸ் வீ சிங்’ எனும் திட்டத்தின்கீழ் புதிய பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தை சிங்கப்பூர் ஆசிரியர்கள் கலைக் கழகமும் தேசிய கலைகள் மன்றமும் இணைந்து நடத்தின. புதிய பாடல்களில் ஆறு பாடல்கள் ஆங்கிலத்தில் உள்ளன. சீனம், மலாய், தமிழ் ஆகிய தாய்மொழி களில் தலா இரண்டு பாடல்கள் படைக்கப்பட்டுள்ளன. ‘ஸ்டோரிஸ் வீ சிங்’ திட்டம் நகர மறுசீரமைப்பு ஆணைய மையத்தில் நேற்று பிற்பகல் அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழ்ப் பாடல்களின் வரிகளைப் புனைந்த தலைமை முதன்மை ஆசிரியர் எஸ்.பி. ஜெயராஜதாஸ் பாண்டியன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்