You are here

கிரிக்கெட்: ஒரு நாள் போட்டியில் 16 வயது ஜெமிமா இரட்டை சதம்

மும்பை: பெண்களுக்கான உள்ளூர் கிரிக்கெட் தொடரான 19 வயதிற்குட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. ஒளரங்காபாத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் மும்பை-, சௌராஷ்டிரா அணிகள் மோதின. மும்பை அணியில் 16 வயதே ஆகும் இளம் வீராங்கனை- யான ஜெமிமா ரோட்ரிக்ஸ் இடம் பிடித்திருந்தார். இவர் சௌராஷ்டிரா வீராங்கனைகளின் பந்து வீச்சை துவம்சம் செய் தார். சிறப்பாக ஆடிய ஜெமிமா 163 பந்தில் 202 ஓட்டங் கள் குவித்து வெளியேறாமல் இருந்தார். இவரது ஆட்டத் தால் மும்பை 50 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 347 ஓட் டங்கள் குவித்தது. இந்தத் தொடரில் ஜெமிமா இரண்டு சதங்கள் அடித்து சாதனை புரிந்துள்ளார். 10 போட்டிகளில் 700 ஓட்டங்களை எட்டியுள்ளார்.