You are here

ரசாயனத் தாக்குதல்: தயார்நிலையில் பாதுகாப்பு அமைப்புகள்

பயங்கரவாதிகள் ரசாயனத் தாக்கு தலில் ஈடுபட்டால் அதை எதிர் கொள்ள சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை, தேசிய சுற்றுப்புற வாரியம் போன்ற அமைப்புகள் தயார்நிலையில் இருப்பதாக சுற்றுப் புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார். எடுத்துக்காட்டாக, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் அவ்வப்போது பாவனைப் பயிற்சி களை மேற்கொள்கின்றனர். நச்சுத் தன்மைமிக்க வாயுக்கள் காற்றில் கலந்தால் அதைக் கண்டறிந்து, அடையாளம் காணும் கையடக்க உணர்கருவிகளும் அவர்களிடம் உள்ளன.

காற்றுத் தூய்மைக்கேட்டைக் கண்டறியும் வகையில் சிங்கப் பூரின் பல இடங்களில் அமைக்கப் பட்டுள்ள நிலையங்கள் மூலமாக நிகழ் நேர காற்றுத் தரத்தைச் சுற்றுப்புற வாரியம் கண்காணித்து வருகிறது. ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் காற்றில் மிகச் சிறிய அளவு இருந்தாலே அதை அளக் கும் திறனை அவற்றுள் பல நிலை யங்கள் கொண்டுள்ளன. அத்தகைய ரசாயன வாயுக்கள் தனியாகவோ அல்லது மற்ற சேர்மங்களுடன் வினைபுரிவதன் மூலமோ துர்நாற்றத்தை ஏற்படுத்த லாம். கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி பிளாஸ்டிக் எரிவது போன்ற துர் நாற்றமும் கரும்புகையும் சிங்கப் பூரின் பல பகுதிகளில் உணரப் பட்டன. ஜோகூரின் பாசிர் கூடாங்கில் உள்ள ஒரு ரசாயன ஆலையில் இருந்து அந்தத் துர்நாற்றம் வந்ததை மலேசிய அதிகாரிகளின் துணையுடன் சுற்றுப்புற வாரியம் கண்டறிந்தது.