You are here

ஓய்வுபெறும் கிஷோர் மெஹ்புபாணி

லீ குவான் இயூ பொதுக் கொள்கைப் பள்ளியின் தலைவர் பதவியிலிருந்து பேராசிரியர் கிஷோர் மெஹ்புபாணி (படம்) அடுத்த மாதம் 31ஆம் தேதி ஓய்வு பெறுவதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் நேற்று அறிவித்தது. 69 வயது பேராசிரியர் மெஹ்புபாணி, லீ குவான் இயூ பொதுக் கொள்கைப் பள்ளியின் தலைவராக அப்பள்ளி 2004ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து 13 ஆண்டுகளுக்கும் அதிகமாகப் பொறுப்பு வகித்து வருகிறார். அதற்கு முன்னதாக வெளியுறவுச் சேவையில் அவர் 33 ஆண்டுகளுக்கு சேவையாற்றினார். 1993ஆம் ஆண்டிலிருந்து 1998ஆம் ஆண்டு வரை வெளியுறவு அமைச்சின் நிரந்தரச் செயலாளராக அவர் பொறுப்பு வகித்தார்.