You are here

ரயிலில் கடத்த முயற்சி: போதைப்பொருளுடன் சிக்கிய இருவர் கைது

சென்னை: மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை ரயில் மூலம் கடத்த முயன்ற இளையர்கள் இருவர் சென்னை போலிசாரிடம் சிக்கினர். விசார ணையில் இருவரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரும் ஆப்பிரிக்க நாடான மலாவியில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ‘எபிடிரையின்’ என்ற போதைப் பொருளை சென்னையில் இருந்து மேற்கு வங்க மாநிலத்துக்கு கடத்த இருந்தபோது பிடிபட்டுள் ளனர். சில மாதங்களுக்கு முன்பு மலாவியில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலிசாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து டெல்லி விமான நிலையத்தில் கடும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் யாரும் சிக்கவில்லை. எனினும் குறிப்பிட்ட விமானத் தில் பயணம் செய்தவர்கள் தொடர்பான விவரங்களைப் பெற்ற போலிசார், அப்பயணிகளை ரகசியமாகக் கண்காணித்தபோது தில்லியா எதினா என்ற 40 வயது பெண் மீது சந்தேகம் எழுந்தது. டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு 22 கிலோ எடையுள்ள காபின் என்ற போதைப் பொருளை கடத்தி வந்த அவரை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து போலிசார் கைது செய்தனர்.