You are here

‘ஒட்டுமொத்த விற்பனைகளால் விலை உயரும் என்றாகாது’

அண்மையில் நடந்துவரும் ஒட்டு மொத்த குடியிருப்பு விற்பனை களால் விலைகள் உயரும் என்று அர்த்தமில்லை என தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். நில மேம்பாட்டாளர்கள் சந்தையின் தேவை, விநியோக நிலவரத்திற்கு உட்பட்டிருப்பது இதற்குக் காரணம். குறிப்பாக, அவர்கள் கூடுதல் முத்திரை வரிக்கு உட்படுத்தப்படு கின்றனர். இதன்படி, நிலத்தை வாங்கி ஐந்து ஆண்டுகளுக்குள் அவர்கள் புதிய வீடுகளைக் கட்டி விற்கவேண்டும். இல்லாவிடில், நிலத்தின் கொள்முதல் விலையில் 15 விழுக்காட்டைக் கூடுதல் வரியாகச் செலுத்த நேரிடும்.

நில மேம்பாட்டாளர்கள் நியாய மான விலையை நிர்ணயித்து விற்பனை செய்வதை உறுதிப் படுத்த இந்நடவடிக்கை உதவு வதாகத் திரு வோங் கூறினார். அதே சமயத்தில், தற்போது ஒட்டுமொத்த விற்பனை செய்யப் படும் நிலப்பகுதிகளில் ஓரிரு ஆண்டுகளில் புதிய வீடுகள் விற்பனைக்கு வரும். இதனால் சந்தையில் விநி யோகம் அதிகரித்து, வருங் காலத்தில் விலைகள் மீது மிதமான நெருக்குதல் ஏற்படும் என்றார் திரு வோங். இவ்வாண்டு இதுவரை சுமார் 2,700 தனியார் வீடுகள் ஒட்டு மொத்த விற்பனை செய்யப்பட்டு உள்ளன. சென்ற ஆண்டு விற்கப்பட்ட 600 வீடுகளைவிட இது நான்கு மடங்குக்கு மேல் அதிகம். இந்த அதிகரிப்புக்குத் திரு வோங் இரண்டு காரணங்கள் கூறினார்.