You are here

குடிநுழைவு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்

போலிசுக்கு உரிய சில அதிகாரங் களை குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகள் சோதனைச்சாவடிகளில் பயன் படுத்த அதிகாரமளிக்கும்படி நாடாளுமன்றத்தில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. குடிநுழைவுச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று முதல் வாசிப்புக்கு விடப்பட்டது. சோ த னை ச் சா வ டி க ளி லு ம் அதையொட்டிய பகுதிகளிலும் சோதனை நடத்தவும் பறிமுதல் செய்யவும் பாதுகாப்புச் சோதனை களை மேற்கொள்ளவும் கைது செய்யவும் இந்தச் சட்டத் திருத்தம் குடிநுழைவு அதிகாரிகளுக்கு அதி காரம் அளிக்கும். இப்போதைக்கு அவர்கள் அத்த கைய அதிகாரங்களைப் பெற்று இருக்கவில்லை. பரிந்துரைக்கப் பட்டுள்ள சட்டத் திருத்தங்களின் படி, பாதுகாப்பு நடைமுறைகளில் போலிசுக்குத் துணையாக இருக் கும் வகையில் அவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படும். சம்பவ இடத்திற்கு போலிஸ் வந்து சேருவதற்கு முன், குடி நுழைவு அதிகாரிகள் தங்களுக் கான கூடுதல் அதிகாரங்களைப் பயன்படுத்தி சம்பவங்களைக் கட் டுப்படுத்தவும் முதற்கட்ட விசா ரணைகளை மேற்கொள்ளவும் முடியும்.

அத்துடன், தேவைப்பட்டால் சாங்கி விமான நிலையம் வழியாகப் பயணம் செய்வோரிடம் புகைப்படம், கடவுச்சீட்டு விவரம், கைரேகை போன்ற தனிப்பட்ட விவரங்களைப் பெறவும் குடிநுழைவு அதிகாரி களுக்கு அதிகாரம் அளிக்கப்படும். இது பாதுகாப்பை மேம்படுத்த வும் குடிநுழைவு அதிகாரிகளையும் சிங்கப்பூர் போலிஸ் படை அதிகாரி களையும் உள்ளடக்கிய ஒருங் கிணைந்த சோதனைச் சாவடி தள பத்தியத்தில் ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் உதவும்.

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் பயணிகளின் வாகனங்கள் எவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன என்பதை விளக்குகிறார் குடிநுழைவு அதிகாரி ஒருவர். கோப்புப்படம்