You are here

காபூல் தொலைக்காட்சி நிலையம் மீது தாக்குதல்

காபூல்: ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள தொலைக்காட்சி நிலையம் மீது துப்பாக்கிக்காரர்கள் தாக்கியதில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. தொலைக்காட்சி நிலையத்திற் குள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கியால் சுட்டும் கை யெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். துப்பாக்கிக்காரர்கள் இன்னும் அக்கட்டடத்திற்குள் இருப்பதாக அங்கிருந்து தப்பிவந்த செய்தி யாளர் ஒருவர் கூறினார். துப்பாக்கிக்காரர்கள் நுழைந்த போது அக்கட்டடத்தினுள் 100க் கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எத்தனை பேர்? எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? எவ்வளவு பேர் காயம் அடைந்தனர் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை என்று போலிசார் கூறினர். அத்தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்று தலிபான் குழு அறிவித்திருப்பதால் அத் தாக்குதலுக்கு யார் காரணம் என்பது இன்னும் தெரியவில்லை. துப்பாக்கிக்காரர்களில் ஒரு வன் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரி வித்துள்ளனர். காபூலில் அண்மைய மாதங்களாக தலிபான் போராளிகளும் ஐஎஸ் போராளிகளும் அடிக்கடி தாக்குதல் நடத்தி வந்துள்ளனர்.