You are here

இயல்பு வாழ்க்கை சீரடைந்து வருகிறது: அமைச்சர் தகவல்

சென்னை: பருவ மழை தீவிரமாகப் பெய்த நிலையில், அரசு மேற் கொண்ட புயல் வேக நடவடிக்கை கள் காரணமாக தமிழகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை சீரடைந்து வருவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், ஏரி முகத்துவாரம், கால்வாய் பராமரிப்புப் பணிகளுக்கு பருவ மழை துவங்கிய பின்னரே, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது முற்றிலும் தவறு என்றார். “மூன்று மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து, மழைக்கால பணி கள் முடக்கி விடப்பட்டு உள்ளன.

ஏரி, குளங்களை ஆக்கிரமித்து, ஐந்து முதல் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு கடந்த திமுக ஆட்சிக்காலத்தில்தான் பட்டா வழங்கப்பட்டது. “இதனால்தான், மக்கள் தற் போது வெள்ளத்தில் துன்பப்படு கின்றனர்,” என்றார் அமைச்சர் ராஜூ. ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை யார் ஆக்கிரமித்து இருந்தாலும் அந்த ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்படும் என்று குறிப்பிட்ட அவர், எந்த அரசியல் கட்சியினர் என்று பார்க்காமல் பாரபட்சமின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். பருவ மழையை எதிர்கொள்ள தமிழக அரசு உரிய முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வில்லை என எதிர்க்கட்சிகள் பலவும் சாடியுள்ளன. இந்நிலையில் திமுகவைக் குறை கூறியுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜு.