You are here

டோனியின் ஆட்டத்தில் யாருக்கும் சந்தேகமில்லை: புவனேஷ்வர் குமார்

  • படம்: ராய்ட்டர்ஸ்

திருவனந்தபுரம்: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பும்ரா பந்து வீசும் முறை வித்தியாசமாக இருக்கும். இதனைப் புரிந்துகொள்வதில் பந்தடிப்பாளர்களுக்குச் சிரமம் ஏற்படும். அவர் தனது பந்து வீச்சில் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளார். “யார்க்கர் மற்றும் மெதுவாகப் பந்து வீசுவதிலும் நல்ல ஏற்றம் கண்டிருக்கிறார். பும்ராவுடன் பந்து வீசுவது நம்பிக்கை அளிக் கக் கூடியதாகும்.

“போட்டி தொடங்கியதும் நாங் கள் ஆடுகளத்தின் தன்மை குறித்துக் கருத்துப் பரிமாறிக் கொள்வோம். எந்த மாதிரியான அணுகு முறையைக் கடைப்பிடிப் பது என் பது குறித்தும் ஆலோசிப் பதால் இருவருக்கும் நல்ல பலன் கிடைக்கிறது. ராஜ்கோட்டில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி கண்ட தோல்விக்குப் பந்து வீச் சாளர்களைக் குறைகூறக் கூடாது. “நியூசிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரு கிறது.

காலின் முன்ரோ எங் களுக்குச் சிரமம் கொடுத்து வரு கிறார். அந்த அணியில் கேன் வில்லி யம்சன், மார்ட்டின் கப்டில் ஆகிய சிறந்த பந்தடிப்பாளர்களும் உள்ள னர். “டோனியின் ஆட்டத்தில் யாருக்கும் சந்தேகம் இல்லை. அவர் ஒரு ஜாம்பவான். அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும்,” என்று புவனேஷ்வர் குமார் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி இந்தியா, இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் புவனேஷ்வர் குமார், டோனி. படம்: ராய்ட்டர்ஸ்