You are here

அரசுத் திட்டங்கள் மூலம் 3,200 மாணவர்களுக்கு வெளிநாட்டு அனுபவம்

மாணவர்களை உலகளாவிய வேலைகளுக்கு ஆயத்தப்படுத்தும் நோக்கில் கடந்த மூன்று ஆண்டு களில் கிட்டத்தட்ட 3,200 மாண வர்கள் வெளிநாட்டு அனுபவங் களைப் பெற்றுள்ளனர். ஐஇ சிங்கப்பூர் எனும் ‘இண்டர் நேஷனல் சிங்கப்பூர்’ நடத்தும் இளம் திறனாளர் திட்டத்தால் உள்ளூர் பல்கலைக்கழகங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகங் கள் ஆகியவற்றில் பயிலும் மாண வர்கள் பயன் அடைகிறார்கள். இத்திட்டத்தின் மூலம் மாணவர் கள் வெளிநாடுகளில் வேலை புரியும் அனுபவத்தைப் பெற முடிகிறது.

வெளிநாட்டு வர்த்தகச் சந்தைகளில் பெற்ற அனுபவங்களைக் கொண்டு அவர்கள் நாடு திரும்பியவுடன் உள்ளூர் வர்த்த கங்கள் உலகமய மாகுதலுக்கான தேசிய உந்து தலுக்கு அவர்களால் உதவ முடியும். உலகளாவிய வர்த்தக சந்தைகளைக் கையாள்வதிலும் அவர்களால் மேலும் பெரிய அளவில் பங்காற்ற முடியும். கடந்த 2013ஆம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர் களுக்காக தொடங்கப்பட்ட இத்திட்டம் 2015ஆம் ஆண்டு பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்கும் தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 1,900 பல்கலைக்கழக மாணவர்களும் 1,100க்கும் மேற்பட்ட பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களும் 200 தொழில்நுட்பக் கல்விக்கழக மாணவர்களும் இத்திட்டத்தால் பயன் அடைந்துள்ளனர்.