You are here

சிட்னி: பள்ளி வகுப்பறைக்குள் கார் புகுந்ததில் 2 சிறுவர்கள் பலி

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியின் வகுப் பறைக்குள் திடீரென்று ஒரு கார் புகுந்ததில் 8 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்ததாக போலிசார் கூறினர். பேங்க்சியா பள்ளியில் நடந்த அந்த சம்பவத்தில் மேலும் மூன்று மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அந்தச் சம்பவத்தின்போது வகுப்பறையில் இருந்த மற்ற 19 மாணவர்களின் உடல்நிலையை மருத்துவ உதவியாளர்கள் பரி சோதனை செய்ததாக அதிகாரி கள் கூறினர். அந்தக் காரின் ஓட்டுநரான 52 வயது மாது போலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அந்த மாது வேண்டுமென்றே அவரது காரை வகுப்பறைக்குள் ஓட்டிச் சென் றிருக்க மாட்டார் என்று தாங்கள் நம்புவதாக போலிசார் கூறி யுள்ளனர். கார், வகுப்பறைக்குள் புகுந்த தைத் தொடர்ந்து ஆசிரியர்களும் மாணவர்களும் பதற்றத்துடன் காணப்பட்டனர். அந்த பயங்கர சம்பவத்தைத் தொடர்ந்து அந்த இடம் அமளி நிறைந்த இடமாக காட்சியளித்தது என்று மருத்துவ உதவியாளர்கள் கூறினர். கார் வகுப்பறைக்குள் புகுந்து மாணவர்கள் மீது மோதியதில் படுகாயம் அடைந்த இரு மாணவர்கள் பின்னர் மருத்து வமனையில் உயிரிழந்தனர். காயம் அடைந்த மூன்று மாணவர்களில் 9 வயது சிறுமியின் நிலை கவலைக் கிடமாக இருப்பதாக மருத்துவ மனைத் தகவல்கள் கூறின.