You are here

காற்பந்து: ஸ்பர்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கேன் விலகல்

  • படம்: ஏஎப்பி

லண்டன்: டோட்டன்ஹாம் ஹாட்ஸ் பர் காற்பந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஹேரி கேன் வலது கால் முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்தின் நட்பு முறை ஆட்டத்தில் இருந்து விலகிக் கொண்டார். அந்த அணியின் ஹேரி விங்ஸும் கணுக்கால் மூட்டு காயத்தால் விலகியுள்ளார். இவர் களுடன் சேர்த்து இதுவரையிலும் மொத்தம் மூன்று வீரர்கள் இங்கிலாந்து அணியில் இருந்து விலகியுள்ளனர். லண்டன் வெம்ப்ளி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் கிரிஸ்டல் பேலஸின் ஜோயல் வார்ட்டுடன் மோதி நிலைகுலைந்த ஸ்பர்ஸ் அணியின் ஹேரி கேன். படம்: ஏஎப்பி