You are here

நீடிக்கும் மழை: தனித் தீவுகளான கிராமங்கள்

நாகை: சென்னையை அடுத்து நாகப்பட்டினம் மாவட்டத்தையும் வடகிழக்குப் பருவமழை ஆட்டிப் படைத்து வருகிறது. நாகையில் ஏராளமான கிராமங்களை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பிற பகுதிகளில் இருந்து அக்கிராமங்கள் துண்டிக் கப்பட்டுள்ளன. பல இடங்களில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கக்கூட கிராம மக்கள் பட கில் சென்றுவர வேண்டிய சூழ் நிலை நிலவுகிறது. சென்னையைப் போலவே நாகப் பட்டினம் மாவட்டத்திலும் கடந்த 9 தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரண மாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரில் மூழ்கி உள்ளன. பொதுமக்கள் வெளியே சென்று வர இயலாது வீடுகளி லேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

சில பகுதிகளில் மக்கள் தங்களது கால்நடைகளை இழந்துள்ளனர். சில இடங்களில் வீடுகள் முழுவதும் அல்லது சில பகுதியோ சேதமடைந்துள்ள நிலையில், அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தலைஞாயிறு உள்ளிட்ட சில பகுதிகளில் மழை நீரில் மூழ்கிய பயிர்கள் அழுகிப் போயின. இத னால் தங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் கூறுகின்றனர். தலைஞாயிறு அருகில் அமைந்துள்ள வண்டல் கிராமத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரி டப்பட்ட சம்பா பயிர் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது.

இக்கிராமத்தைச் சுற்றி மழை நீர் வெள்ளம்போல் தேங்கி நிற்ப தால் அப்பகுதியே தனித்தீவு போன்று காட்சி அளிக்கிறது. அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும் கூட வண்டல் கிராமத்து மக்கள் படகுகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. முறையான வடிகால் வசதி ஏற்படுத்தாததே வயல்கள் மூழ்கிய தற்கு காரணம் என்றும், தொடர்ந்து அரசுக்கு இது தொடர்பாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்தப் பகுதியினர் கூறுகின்றனர். இதே போன்று காடம்பாடி, சால மண்தோட்டம், நாகூர், நாகை வாய்க்காங்கார தெரு, கூக்ஸ் சாலை, செல்லூர் சுனாமி குடியி ருப்பு, பாலையூர், வேட்டைக்காரனி ருப்பு, முதலியப்பன்கண்டி, பழை யாற்றங்கரை, குண்டுரான்வெளி, உம்பளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளையும் மழைநீர் சூழ்ந்துள் ளதால் அவையும் தீவு போல் காட்சி தருகின்றன. இந்தப் பகுதிகளிலும் படகுப் போக்குவரத்துதான் பொதுமக்க ளுக்கு வெகுவாகக் கைகொடுப்ப தாகக் கூறப்படுகிறது.

படகில் சென்று பொருட்கள் வாங்கித் திரும்பும் வண்டல் கிராம மக்கள். படம்: தகவல் ஊடகம்