You are here

வருத்தம் தெரிவித்த புது நாயகி

  • நடிகை அதுல்யா ரவி

ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு ஏற்பவே தாம் நடிப்பதாக நடிகை அதுல்யா ரவி கூறியுள்ளார். ‘காதல் கண் கட்டுதே’ படத்தில் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பின் மூலம் கோடம்பாக்கத்து ரசிகர்களைக் கவர்ந்தவர் அதுல்யா ரவி. தற்போது இவர் நடித்துள்ள ‘ஏமாளி’ படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. அதில் அதுல்யா மிகக் கவர்ச்சி யாக நடித்திருப்பதாக ரசிகர்கள் மத்தியில் முணுமுணுப்பு நிலவுகிறது.

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சித்துள்ளனர். இந்தளவு கவர்ச்சி கூடாது என்பதே பலரது கருத்தாக உள்ளது. இந்நிலையில் கவர்ச்சியாக நடித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார் அதுல்யா ரவி. “ரசிகர்களின் நேர்மறையான ஊக்கத்திற்கு நன்றி. வெறும் முன்னோட்டத்தை மட்டுமே வைத்து ஒரு படத்தையும் கதாபாத்திரத்தையும் முடிவு செய்யாதீர்கள். படத்தில் நல்லதொரு கதாபாத்திரத்தில்தான் நான் நடித்திருக்கிறேன். அக்கதாபாத்திரத் திற்கு ஏற்பவே நடித்துள்ளேன். எனினும் கவர்ச்சியான காட்சிகளுக் காக வருந்துகிறேன்,” எனக் கூறியுள்ளார் அதுல்யா ரவி.