You are here

வேறு நாட்டுக்கு விளையாடத் தயார் என்கிறார் ஸ்ரீசாந்த்

  • படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: 2013ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின்போது ஆட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் (படம்), அங்கித் சவான், அஜித் சண்டிலா உள்ளிட் டோர் கைது செய்யப் பட்டனர். இதையடுத்து ஸ்ரீசாந்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆயுட்காலத் தடை விதித்தது. இந்நிலையில், இந்திய கிரிக் கெட் வாரியம் தனக்கு விளையாட வாய்ப்புக் கொடுக்காவிட்டால் நான் வேறு ஒரு நாட்டுக்கு விளையாடவும் தயார் என்று கூறியுள்ளார் ஸ்ரீசாந்த். சூதாட்ட வழக்கில் இருந்து ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 36 பேரை விடுவித்து டெல்லி நீதிமன்றம் கடந்த 2015ஆம் ஆண்டு உத்தர விட் டது.

இதையடுத்து தனக்கு விதிக் கப்பட்ட ஆயுட்காலத் தடையை எதிர்த்தும் ஸ்ரீசாந்த் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவரது தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கிரிக்கெட் வாரியம் மேல்முறையீடு செய்த வழக்கில் ஸ்ரீசாந்தின் ஆயுட்காலத் தடையை உறுதிசெய்து கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு உத் தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஆயுட் காலத் தடையை நீக்கக் கோரி கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக ஸ்ரீசாந்த் அண்மையில் அறிவித்தார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆயுட்காலத் தடைவிதிக்கப் பட்டிருக்கும் ஸ்ரீசாந்த். படம்: ஏஎஃப்பி