You are here

கோ: ரயில் துறையில் அதிக வாய்ப்பு உள்ளன

சிங்கப்பூரின் ரயில் சேவை நம்பகத்தன்மையில் பிரச்சினைகள் இருந்தாலும் அத்துறை வளார்ந்து வரும் ஒன்று என்றும் அதில் ஆர்வமுள்ள சிங்கப்பூரர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன என்றும் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நாடாளுமன்றத்தில் நேற்று கூறினார். சிங்கப்பூருக்கும் மலேசியா வுக்கும் இடையில் கட்டப்படவுள்ள கோலாலம்பூர்=சிங்கப்பூர் அதி வேக ரயில் சேவையை அவர் சுட்டினார். மேலும் சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோட்’ திட்டம் உட்பட ஆசியாவில் நூறாயிரக்கணக்கான கிலோமீட்டர் நீளம் கொண்ட ரயில் பாதையை அமைக்கும் திட்டங்கள் தற்போது உள்ளன என்றும் அவர் சொன் னார்.

ரயில் துறையில் அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் அதைச் சிங்கப்பூரர்கள் பயன் ப டு த் தி க் கொ ள் ள வே ண் டு ம் என்றும் அமைச்சர் கோ வலியுறுத் தினார். ரயில் பொறியியல் துறையில் நிபுணத்துவம் கொண்ட ரயில் பொறியியல் பட்டதாரிகள் சிங்கப் பூரில் போதுமான எண்ணிக்கை யில் உள்ளனரா என்றும் இளம் பொறியாளர்களிடையே ஆழமான ரயில் பொறியியல் நிபுணத்து வத்தை அரசு எப்படி வளர்க்கப் போகிறது என்று பாசிர் ரிஸ் பொங்கோல் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுன் சுயேலிங் நேற்று கேள்வி எழுப்பி னார்.