You are here

ரூ.1,833 கோடி பினாமி சொத்துகள் முடக்கம்

புதுடெல்லி: கடந்த மாதம் வரை ரூ.1,833 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியிருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் சு‌ஷில் சந்திரா தெரி வித்துள்ளார். ஒருவர் தனது பெயரில் கணக்கில் அடங்காத சொத்து களை வைத்திருந்தால் அதற்கு வரி கட்டவேண்டும் என்பதால் மற்றவர்களின் பெயர்களில் சொத்துகளை வாங்கிக் குவிப்பது உண்டு. அப்படிப்பட்ட பினாமி சொத்துகளை ஒழித்துக் கட்ட மத்திய அரசு தீவிர நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. இந்த தொடர் நடவடிக்கை கள் காரணமாக மத்திய வரு வாய்ப் பிரிவு அதிகாரிகள் நாடெங்கும் திடீர் திடீர் சோத னைகளை நடத்தி வருமானத் துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளவர்களின் பல கோடிக்கணக்கான சொத்துகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அவ்வகையில் கடந்த மாதம் வரை ரூ.1,833 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியிருப்பதாக சு‌ஷில் சந்திரா தெரிவித்தார். இதில் அகமதாபாத்தில் 136, போபாலில் 93, கர்நாடகா, கோவாவில் 76, சென்னையில் 72 என மொத்தம் 541 பெயர்களில் உள்ள பினாமி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. பினாமி சொத்துகளுக்கு எதி ராக கடும் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ள பிரதமர் மோடி, பினாமி சொத்து வைத்திருப்போர் யாரும் தப்பிக்கமுடியாது என அண்மையில் கூறியிருந்தார்.