You are here

பேராசிரியர் மா.நன்னன் முதுமையால் காலமானார்

  • தமிழறிஞ ரும் எழுத்தாளருமான மா.நன்னன்

சென்னை: பிரபல தமிழறிஞ ரும் எழுத்தாளருமான மா.நன்னன் நேற்று காலமா னார். அவருக்கு வயது 94. முதுமை காரணமாக அவர் காலமானதாக குடும்பத்தார் தெரிவித்தனர். நன்னனின் சொந்த ஊர் விருத்தாசலம் அருகே உள்ள சாத்துக்குடல் ஆகும். கடந்த 1924ஆம் ஆண்டு பிறந்த அவர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டமும், சென்னைப் பல் கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். பின்னர் தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். அதையடுத்து உயர்நிலைப் பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக்கல்லூரி எனப் பல் வேறு நிலைகளில் பணி யாற்றிய பேராசிரியர் மா.நன்னன், வெள்ளையனே வெளியேறு, இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பேராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் கட்டுரை, பாட நூல்கள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நூல்கள் இவரது கைவண்ணத்தில் படைக்கப் பட்டன. பெரியார் விருது, தமிழ்ச் செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ள நன்னன், தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராகவும் பணியாற்றியவர்.