You are here

சுந்தரமூர்த்தி: பஹ்ரேனை வெல்வதே குறிக்கோள்

ஆசிய கிண்ணக் காற்பந்துப் போட்டிகளுக்குத் தகுதிபெற சிங்கப்பூர் போராடி வருகிறது. ஆனால், அதற்கான முயற்சியை சிங்கப்பூர் அணியின் பயிற்றுவிப்பாளர் சுந்தரமூர்த்தி கைவிடுவதாக இல்லை. ‘இ’ பிரிவில் முதலிடம் வகிக் கும் பஹ்ரேனை அடுத்த செவ் வாய்க்கிழமை நடைபெறும் போட்டி யில் சிங்கப்பூர் வெற்றி பெற வேண்டும். அதன்பின், மார்ச் மாதம் 27ஆம் தேதி தைவானுட னான போட்டியில் அந்த நாட்டை வெல்ல வேண்டும். இவற்றோடு மட்டுமல்லாது தைவான் துர்க்மனிஸ்தானுடன் சமநிலை காண்பதுடன் துர்க் மனிஸ்தான் பஹ்ரேனிடம் தோல்வி காண வேண்-டும்.

இந்நிலையில், பஹ்ரேனுடன் நடக்கவுள்ள போட்டியில் தன் னைத் தயார் செய்துகொள்வதற் காக இன்றிரவு லெபனானுடன் சிங்கப்பூர் அணி மோதுகிறது. இதுபற்றிக் கூறும் சுந்தர மூர்த்தி, “நமக்கு இன்னமும் சிறிய அளவிலான வாய்ப்பு உள்ளது. “பஹ்ரேனை வெற்றி கொள்ள முழு முயற்சி மேற்கொள்வோம். “நான் பார்த்த வரையில், தேசிய காற்பந்து அணிக்கு விளையாட வீரர்கள் அனைவரும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். “இதுவரை விளையாடிய ஆட்டங்களின் முடிவு சாதகமாக இல்லாவிடினும், விளையாட்டாளர் களின் ஆட்டம் முன்னேற்றம் கண்டுள்ளது. “ஆனால், நாம் தொடர்ந்து கடுமையாகப் பயிற்சி செய்து விளையாடினால் இறுதியில் போட்டி முடிவுகள் சாதகமாக இருக்கும்,” என்று நம்பிக்கையுடன் கூறினார். ‘இ’ பிரிவில் 7 புள்ளிகளுடன் பஹ்ரேன் முதலிடத்தை வகிக் கிறது. சிங்கப்பூர், துர்க்மனிஸ் தான், தைவான் நாடுகளுக்குப் பின்னால் கடைசி நிலையில் உள்ளது.