You are here

செவிடன் காதில் ஊதிய சங்கு: அரசு குறித்து விஜயகாந்த் கடும் விமர்சனம்

சென்னை: பருவ மழை தொடர்பாக எதிர்க்கட்சிகள் விடுத்த எச்சரிக்கையை தமிழக அரசு பொருட்படுத்தவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் சாடியுள்ளார். மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதைவிட ஆக்கபூர்வமான பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். “பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால்தான் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் எச்சரிக்கை விடுத்தன. ஆனால் நடப்பு அரசு செவிடன் காதில் ஊதிய சங்குபோல் எவ்வித முன்னெச்சரிக்கை பணிகளையும் செய்யவில்லை. இதன் விளைவாகவே, ஒரு வார மழைக்கே தமிழகத்தின் நிலை கேள்விக் குறியாகிவிட்டது,” என விஜயகாந்த் மேலும் தெரிவித்துள்ளார்.