You are here

இத்தாலியின் வழக்கமான விளையாட்டை ஆடுங்கள்

அடுத்த உலகக் கிண்ணக் காற் பந்து போட்டிகளில் கலந்துகொள்ள முடியாமல் போவதைத் தவிர்க்க நாளை இரவு சுவீடனுடனான தகுதிச் சுற்று முதல் ஆட்டத்தில் இத்தாலி தனக்கே உரிய வழக்க மான விளையாட்டை விளையாட வேண்டும் என்று அதன் பயிற்று விப்பாளர் கியான் பியரோ வென் டுரா அறிவுரை வழங்கியுள்ளார். இது ஒருபுறமிருக்க, சுவீட னுக்கு எதிராக இதுவரை ஐந்து முறை களமிறங்கிய இத்தாலி அதில் நான்கு முறை வெற்றி பெற்றுள்ளது. இதில் கடந்த ஐரோப்பிய கிண்ணப் போட்டியில் 1=0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற தும் அடங்கும்.

இதில் இத்தாலி அணிக்கு சிக்கலை குறைக்கும் வகையில் மான்செஸ்டர் யுனைடெட் வீரரும் சுவீடனைச் சேர்ந்தவருமான ஸ்லாட்டன் இப்ராஹிமோவிச் தமது நாட்டுக்காக விளையாடுவதி லிருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தாலி தனது வழக்கமான ஆட்டத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்ற வென்டுரா, “அந்த அணியில் பெரும்பாலும் ஏற்கெனவே அணியில் இருந்த வீரர்கள்தான். உடல் வலிமையைப் பயன்படுத்திக்கொண்டு விளை யாடும் திறன்பெற்ற அவர்களால், கட்டுக்கோப்பாக விளையாடவும் முடியும். இது அவர்கள் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று,” என்று கருத்துரைத்தார் வென்டுரா.

“எங்களது உண்மையான பிரச் சினை சுவீடன் என்ன செய்யும் என்பதல்ல. மாறாக, நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதுதான். இத்தாலி இத்தாலியைப் போல் விளையாட வேண்டும். முக்கிய மான போட்டி என்று வந்தால் நாங் கள் எப்போதுமே நன்றாக விளை யாடி உள்ளோம்,” என்று அவர் விளக்கினார். உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிகளில் நான்கு முறை வெற்றியாளர் விருதைத் தட்டிச் சென்றுள்ள இத்தாலி, 1958ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ணப் போட்டியைத் தவிர, அனைத்து உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளது.

இதில், 1958ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிகள் சுவீடனில் நடந்தது இங்கு நினைவுகூரத் தக்கது. ஆகக் கடைசியாக 1984, 1992 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐரோப்பிய கிண்ண காற்பந்துப் போட்டிகளில் மட்டுமே இத்தாலி கலந்துகொள்ளத் தவறியது. “உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாமல் போய்விடுமோ என்பது பற்றி யாருமே சிந்திக்கவில்லை,” என்று அணியின் பயிற்சி முகாமில் வென்டுரா கூறினார்.