You are here

அனுபமா: முன்னணி நடிகர்களுடன் அனுபமா

‘கொடி’ படத்திற்குப் பிறகு கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, அஜித் ஆகியோருடன் இணைந்து நடிக்க ஆசையாக இருப்பதாகவும் நல்ல கதைக்காக காத்திருப்பதாகவும் கூறுகிறார். மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் புகழ்பெற்றார் அனுபமா பரமேஸ்வரன்.

தமிழில் ‘கொடி’ என்ற ஒரே படத்தில் நடித்தவர் அதன்பிறகு தெலுங்கு திரையுலகிற்குச் சென்றார். அங்கு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருபவர் மீண்டும் தமிழ்த் திரைக்கு வருவேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அனுபமா அளித்த சிறப்பு பேட்டி. “பிரேமம்’ படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தேன். பொது இடங்களில் என்னைப் பார்த்தால் அந்தச் சுருட்டைத் தலைமுடி பொண்ணு என்றுதான் அடையாளம் சொல்வார்கள். இதே சுருட்டை முடியை எல்லாப் படத்திலும் நான் காட்ட முடியாததால் இப்போது வேறு வேறு முடி அலங்காரத்தில் நடித்து வருகிறேன்.

“கொடி’ படத்திற்குப் பிறகு தமிழில் சில கதைகள் வந்தன. ஆனால் நான் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். குறிப்பாக சவாலான வேடங்கள் கிடைத்தால் நடிக்கத் தயாராக இருக்கிறேன். தற்போது தெலுங்கில் நானியுடன் ஒரு படம், பெயரிடப்படாத மற்றொரு படத்திலும் நடிக்கிறேன்.

கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தேன். ஆனால் நடிப்பிற்கு வந்துவிட்டதால் படிப்பைத் தொடர முடியவில்லை. இப்போது தொலைதூரக் கல்வி மூலம் படிக்கிறேன். “நயன்தாராவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் கதைத் தேர்வு வித்தியாசமாக இருக்கும். அவரைப்போன்று கதை தேர்வு செய்து விஜய், சூர்யா, அஜித் ஆகியோருடன் நடிக்க ஆசையாக உள்ளது. அதற்காகச் சென்னை வந்து கதை விவாதத்தில் பங்கேற்று வருகிறேன். விரைவில் புதிய தமிழ்ப் படத்துடன் உங்களைச் சந்திக்கிறேன்,” என்றார் அனுபமா பரமேஸ்வரன்.