You are here

ஆர்ச்சர்ட் சாலையில் கிறிஸ்மஸ் உணர்வு

ஆர்ச்சர்ட் சாலையில் நேற்று முன் தினம் கிறிஸ்மஸ் ஒளியூட்டுக்குப் பிறகு அங்கு கிறிஸ்மஸ் உணர்வு தொடங்கிவிட்டது. ‘தங்ளின் மால்’ கடைத் தொகுதி முதல் ‘பிளாசா சிங்கப் பூரா’ கடைத்தொகுதி வரை, ஸ்காட்ஸ் சாலை உட்பட 2.88 கிலோ மீட்டர் தூரத்திற்கு விளக் குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒளியூட்டு விழாவில் அதிபர் ஹலிமா யாக்கோப் சிறப்பு விருந் தினராகக் கலந்துகொண்டு ஒளி யூட்டைத் தொடங்கி வைத்தார். “முடிவற்ற வியப்பு” என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த ஆண்டின் கிறிஸ்மஸ் ஒளியூட்டு, விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கற்பனை உலகமாக ஆர்ச் சர்ட் சாலை விளங்குவதைச் சித்திரிக்கிறது.

அந்தக் கருப்பொருளுக்கு ஏற்ப விளக்குகளைப் பிரதிபலிக் கும் சுரங்கப்பாதையும் விளக்குக் கம்பிகளால் அலங்கரிக்கப்பட்ட மரங்களும் ஆர்ச்சர்ட் சாலையில் கண்களைக் கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றோடு, ‘நீ ஆன் சிட்டி சிவில் பிளாசா’வுக்கு அருகே ஆர்ச்சர்ட் சாலையில் முதல் முறையாக ‘கிறிஸ்மஸ் வில்லேஜ்’ எனும் நடவடிக்கை கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. அது இம் மாதம் 25ஆம் தேதி முதல் செயல் படத் தொடங்கும்.