You are here

வேகம் குன்றாத முன்னாள் லிவர்பூல் வீரர்கள்

சிங்கப்பூர்: ‘பேட்டல் ஆஃப் த மாஸ்டர்ஸ்’ எனப்படும் முன்னாள் சிங்கப்பூர் தேசிய காற்பந்து வீரர்கள், லிவர்பூல், ஆர்சனல் குழுக்களைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் பங்கேற்ற மூன்று நாற்பது நிமிடப் போட்டிகளில், லிவர்பூல் வீரர்கள் அணி சிங்கப்பூர் லயன்ஸ் அணியினரை 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. முன்னாள் ஆர்சனல் வீரர்களு டனான மற்றோர் ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 2-2 என சமநிலை கண்டனர். இது ஒருபுறமிருக்க, இவர் களுக்குக் காற்பந்தின் மீதான வேகம் இன்னும் அதே அளவு இருக்கிறதா என்ற சந்தேகம் ரசி கர்களுக்கு இருக்குமாயின் அது ஆர்சனலுடனான லிவர்பூல் ஆட் டத்தில் தீர்ந்திருக்கும்.

ஏனெனில் அந்த ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் லிவர்பூல் அணித் தலைவர் ராபி ஃபௌ லரும் ஆர்சனல் தற்காப்பு ஆட்டக் காரரான லோரோனும் மோதிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து இரு அணியினரும் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஆட்டம் முடிந்தபின் முன்னாள் லிவர்பூல் வீரர்கள் அணியின் தலைவர் ராபி ஃபௌலர், “சிங் கப்பூருக்கு வந்தது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. முன்பிருந் ததுபோல் எங்களால் வேகமாக விளையாட முடியாவிட்டாலும் வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கை எங்களிடம் இன்னமும் இருப்பதைக் காணலாம்.