You are here

2030ல் இந்தியாவுக்கு தேவை 55 புது விமான நிலையங்கள்

இந்தியாவுக்கு வரும் 2030ஆம் ஆண்டு வாக்கில் புதிதாக 55 விமான நிலையங்கள் தேவைப் படும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது. இதற்காக அரசாங்கம் 150,000 முதல் 200,000 ஹெக்டர் நிலப்பரப்பை ஒதுக்கவேண்டி யிருக்கும் என்றும் இந்தத் திட் டத்திற்காக US$36 பில்லியன் முதல் US$45 பில்லியன் வரை முதலீடு தேவைப்படக்கூடும் என் றும் சிஏபிஏ எனப்படும் விமானப் போக்குவரத்து மையத்தின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. “இந்தியாவுக்குப் புதிய விமான நிலைய உருவாக்கத் திட் டம் ஒன்று தேவை,” என சிஏபிஏ தெற்கு ஆசிய இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கபில் கோல் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை கடந்த மூன்று ஆண்டுகளில் 18.9% வளர்ச்சி கண்டு வரு கிறது. 2017ல் இதுவரையில் 103 மில்லியன் பயணிகள் உள்நாட்டு விமானப் பயணம் மேற்கொண்டு இருக்கிறார்கள். உலகிலேயே உள்நாட்டு விமா னப் பயண சந்தையைப் பொறுத்த வரையில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மும்பை, டெல்லி, சென்னை போன்ற பெரிய விமான நிலை யங்கள் இப்போது ஏறக்குறைய முழுமூச்சாக செயல்பட்டு வரு கின்றன. அகர்தலா, டேராடூன், கவு ஹாத்தி, ஜெய்ப்பூர், கோழிக் கோடு, லக்னோ, புனே, ஸ்ரீநகர், திருச்சி போன்ற சிறிய விமான நிலையங்கள் தங்களுடைய ஆற்றலுக்கு அப்பாலும் இப்போது திக்குமுக்காடி செயல்பட்டுவரு கின்றன.