You are here

‘போர்க்குற்றங்கள் நடந்தது உண்மையே’

விடுதலைப் புலிகளுடனான உள் நாட்டுப் போரின்போது அரசியல் வாதிகளின் கட்டளையை ஏற்று ராணுவத்தினர் சிலர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டது உண்மை தான் என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒப்புக் கொண்டுள்ளார். இலங்கை ராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போர் மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்தபோது கடந்த 2009ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. இறுதிக்கட்டப் போரின்போது இலங்கை ராணு வத்தினரால் சுமார் 40,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் மன்றம் கூறி வருகிறது.

இறுதிக்கட்டப் போரின்போது இலங்கை ராணுவத்தினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர் என்றும் அதன் தொடர்பில் அனைத்துலக விசாரணை தேவை என்றும் பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. அப்போதெல்லாம், “இலங்கை ராணுவத்தினர் போர்க்குற்றங் களில் ஈடுபடவில்லை,” என்று தற் காத்துப் பேசிய சிறிசேன, முதல் முறையாக அதை ஒப்புக்கொண் டுள்ளார்.