You are here

ஆசியான் தலைமை நாடான சிங்கப்பூரின் முன்னுரிமைகள்

ஆசியான் அமைப்பின் புதிய தலைமை நாடாகப் பொறுப்பேற் றிருக்கும் சிங்கப்பூர், அமைப்பில் உள்ள நாடுகள் அனைத்தும் பல்வேறு அம்சங்களில் ஒரு குழு வாக முன்னேற்றம் காண்பதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த வட்டாரத்தில் இணையப் பாதுகாப்பு, எல்லை தாண்டிய குற்றங்கள் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றில் ஒருங்கிணைந்த செயல்பாடு, மின்னிலக்கத் தொழில்நுட்பம், பொருளியல் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மேம்பாட்டால் ஆசியான் நாட்டு மக்கள் தங்கள் ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுதல் போன்றவை சிங்கப்பூரின் முன்னுரிமை களாக இருக்கும் என்று நேற்று முன்தினம் மணிலாவில் உரை யாற்றியபோது பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.

31வது ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தின் முடிவில் பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே, ஆசியான் அமைப்பின் தலைமைப் பொறுப்புக்குரிய அதிகாரத்துவ சின்னமான கைச்சுத்தியலை பிரதமர் லீயிடம் ஒப்படைத்தார். ஆசியான் அமைப்பின் வெளிப் பங்காளித்துவ நாடுகளு டன் உறவுகளை வலுப்படுத்த சிங்கப்பூர் ஆவன செய்யும் என்று தெரிவித்த திரு லீ, ஆஸ் திரேலியா, இந்தியா ஆகியவற் றுடன் ஆசியான், சிறப்பு உச்ச நிலைக் கூட்டங்களை நடத்தும் என்றும் கூறினார்.