You are here

பெற்றோரால் திருந்திய பெண்ணின் கதை

  • படம்: எஸ்.ஐ.டி.எஃப்.இ

வில்சன் சைலஸ்

இளையர்களின் விருப்பங்களைப் புரிந்துகொள்ளாத பெற்றோருக்கும் பிடித்தமானவற்றை செய்ய முடி யாத இளையருக்கும் இடையிலான உறவுச் சிக்கலை அலசுகிறது ‘கொலுசு’ குறும்படம். டிசம்பர் 2ஆம் தேதி எஸ்பிளனேட் கலை அரங்கில் திரையிடப்படவுள்ள இப்படம் பதின்மவயது பெண்ணான ரஞ்சனியின் பார்வையில் சொல்லப் படுகிறது. சிறு வயதிலிருந்து பெற்றோரால் அடக்கப்படும் ரஞ்ச னிக்குள் வளர்ந்துவரும் விரக்தி, ஒரு கட்டத்தில் அவளை எவ்வாறு வன்முறைக்குத் தூண்டுகிறது என்பது படத்தின் உச்சக்கட்டம்.

பெற்றோரால் அடக்கப்படும் சில இளையர்கள் பாதை மாறிச் சென்று சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொள்வதை விளக்கும் வகையில் குறும்படத்தைத் தயாரித்திருப்பதாகக் கூறினார் படத்தின் கதையை எழுதி, இயக்கியிருக்கும் 36 வயது சலீம் ஹாடி. “இளையர்கள் சிலர் ஆர்வம் உள்ள துறையை விடுத்து பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்ற பிடிக்காதவற்றைத் தேர்ந்தெடுக்கும் போக்கு இன்று நிலவுகிறது,” என்றார் திரு சலீம்.

இது குறித்து பல இளையர்களி டமும் பெற்றோரிடமும் பேசியதாகக் கூறிய சலீம், கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தாம் பெற்ற அனுபவமே இப்படத்திற்கு கருவாக அமைந்தது என்றார். நன்னடத்தைக் கண்காணிப்பில் இருந்த ஓர் இளம் பெண் குறித்த நேரத்திற்குள் வீட்டிற்கு வருவதை உறுதி செய்ய கணுக்காலில் கருவி ஒன்றை அணிந்திருந்தது சலீமின் கவனத்தை ஈர்த்தது. அந்தப் பெண்ணின் கதையின் மூலம் இளையர்கள் பாதை மாறி செல்வதற்கு பெற்றோரும் ஒரு விதத்தில் காரணமாகின்றனர் என்பதை அறிந்த அவர், விவாதத் திற்குரிய இந்தக் கருத்தை குறும் படத்தின் மூலம் கையாள நினைத்தார்.

தேசிய இளையர் மன்றத்தின் ஆதரவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் குறும்படத்தில் ரஞ்சனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் 21 வயது சுகந்தி பெரியசாமி. நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவியான இவர், குறும்படத்தில் சித்திரிக்கப்பட் டுள்ள சூழ்நிலைகளை சிலர் சொந்த வாழ்க்கையிலும் எதிர் கொண்டிருப்பதால் அந்தக் கதா பாத்திரத்தில் நடிப்பது சிரமமாக தென்படவில்லை என்றார்.

‘கொலுசு’ குறும்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள 21 வயது சுகந்தி பெரியசாமி. படம்: எஸ்.ஐ.டி.எஃப்.இ