You are here

கிரிக்கெட் வழி ஊழியர்களிடையே சமூக விழிப்புணர்வு

முஹம்மது ஃபைரோஸ்

சிங்கப்பூரில் நிகழும் குற்றச் செயல்கள், நாட்டின் சட்ட திட்டங்கள் குறித்து வெளிநாட்டு ஊழியர்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தும் முயற்சி களில் ஒரு பகுதியாக கிரிக்கெட் போட்டி ஒன்று நேற்று நடத்தப் பட்டது. ஆண்டுதோறும் பல்வேறு பொழுதுபோக்கு மையங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத் தப்பட்டுவரும் நிலையில் ஜூரோங் போலிஸ் பிரிவும் ஜேடிசி கழகமும் முதன்முறையாக இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த கிரிக்கெட் போட்டி துவாஸ் சவுத் பொழுதுபோக்கு மையத்தில் நடந்தது. ஜூரோங் போலிஸ் பிரிவின்கீழ் வரும் பல்வேறு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளைச் சேர்ந்த 16 குழுக்கள் இப்போட்டி யில் பொருதினர். இதில் ‘செம்ப்கார்ப் மரின் விக்டோரியன்ஸ்’ குழு முதல் இடத்தைப் பிடித்தது. போட்டியை வென்று வெற்றி யாளர்களாக அறிவிக்கப்பட்டது பற்றி குறிப்பிட்ட அணித் தலைவர் முஹம்மது சைதுல் இஸ்லாம், “இந்த வெற்றிக் கோப்பைக்காக விளையாடியது இதுவே முதல் முறை. போட்டியை வென்றது குறித்து எனது அணிக்கு மட்டற்ற மகிழ்ச்சி,” என்று கூறினார்.

வெளிநாட்டு ஊழியர் கேளிக்கை நிகழ்ச்சியில் ‘எஸ்ஜி செக்யூர்’ பாதுகாப்புத் திட்டம் பற்றி விளக்கும் போலிஸ் அதிகாரிகள். படம்: சிங்கப்பூர் போலிஸ் படை