You are here

வசூல் மையமாகத் திகழ்ந்தது போயஸ் தோட்ட இல்லம்: பழ.கருப்பையா

  • முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா

சென்னை: தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் வசூல் செய்யப்பட்ட பணம் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில்தான் வைக்கப் பட்டது என முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா தெரிவித்துள்ளார். போயஸ் தோட்ட இல்லம் வசூல் மையமாகத் திகழ்ந்தது என்றும் அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். “ரூ.2.5 லட்சம் கோடி பணம் சசிகலாவின் கைக்கு வர காரணம் ஜெயலலிதாதான். அவர்தான் ஆட்சியில் இருந்தவர். ஜெயலலிதா இறந்தவுடன் அந்தப் பணம் முழுவதும் சசிகலா குடும்பத்தி னரிடம் போய்ச் சேர்ந்தது. “ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக இருமுறை சிறை தண்டனை விதிக்கப்பட்ட முதல்வர் ஜெய லலிதாதான். இன்றைக்கு ஜெய லலிதா இருந்திருந்தால் பெங்களூர் சிறையில் இருக்க நேரிடும். அப்படி நடந்திருந்தால், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் அவருக்கு துரோகம் செய்திருப்பார்கள். ஏனெ னில் ஐந்தாண்டு காலம் ஆட்சியை நிறைவு செய்ய அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தயவு தேவை,” என்று பழ.கருப்பையா சாடியுள்ளார்.

போயஸ் தோட்ட இல்லம் சசிகலாவின் கட்டுப்பாட்டில்தான் இன்றும் இருப்பதாகக் குறிப்பிட் டுள்ள அவர், அங்கு ஏதாவது கிடைக்கும் என்பதாலேயே வரு மான வரித்துறை சோதனை நடத் தியதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். சோதனை நடைபெறுவதற்கு முழுக் காரணம் பிரதமர் மோடிதான் என்றும், தமிழக முதல்வர் பழனி சாமி சொல்வதை எல்லாம் மோடி கேட்கமாட்டார் என்றும் குறிப்பிட்ட பழ.கருப்பையா, தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அதி முகவில் இரண்டாம் இடத்தில் உள்ள தலைவர்கள் என அனை வரது வீட்டிலும் சோதனை நடத்தப் பட வேண்டுமென வலியுறுத்தினார். “சசிகலா உறவினர்களது வீடுகளில் சோதனை நடத்தியது சரி. அதேசமயம் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் வீடுகளிலும் சோதனை நடத்தப்படாதது ஏன் என்பதுதான் என்னுடைய கேள்வி. “சசிகலா மற்றும் அவரது உற வினர்கள் வீடுகள், ஜெயலலிதா வின் போயஸ் தோட்ட இல்லத்தில் சோதனை நடத்த உத்தரவிட்ட மோடியின் செயல் சரிதான். ஆனால் பாகுபாடு இல்லாமல் எல் லோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார் கருப்பையா.