You are here

சுடுகாட்டில் வேலை செய்யும் பெண்ணைப் பற்றிய கதை ‘ஆறடி’

புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு பெண் சுடுகாட்டில் வெட்டியானாக வேலை செய்வது பற்றிய செய்திகள் அண்மையில் வெளிவந்தன. இயக்குநர் லீனா மணிமேகலை அந்தப் பெண்ணைப் பற்றி ஆவணப்படம் ஒன்றையும் உருவாக்கினார். இப்போது அந்தப் பெண்ணின் வாழ்க்கையைத் தழுவி கற்பனை கலந்து ‘ஆறடி’ என்ற படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

ஒரு பெண் வெட்டியான் வேலை செய்தால் சமூதாயத்தில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதுதான் கதை. அந்தப் பெண்ணுக்கும் அவரைப் பேட்டி எடுக்க வரும் பத்திரிகை யாளருக்கும் காதல் மலர்கிறது. அதன் மூலம் வரும் பிரச்சினைகளும் கதையில் விவரிக்கப்படுகிறது. விஜயராஜ், தீபிகா ரங்கராஜ், ஜீவிதா, டாம்பிராங், சாப்ளின் பாலு உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்.கே.விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அபிஜோ ஜோ இசை அமைத்துள்ளார். சக்திவேல் இயக்கி உள்ளார். அண்மையில் இதன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. திரையுலக முன்னணியினர் கலந்து கொண்டு இந்தப் புதிய முயற்சிக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.