You are here

உலகளாவிய கல்வி ஆய்வில் சிங்கப்பூர் மாணவர்கள் முதலிடம்

அறிவியல், கணிதம், வாசிப்பு ஆகியவற்றில் மட்டுமன்றி, குழுவா கச் சேர்ந்து பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலும் சிங்கப்பூர் மாணவர்களே உலகளவில் உச்சத் தில் இருப்பதாகப் பொருளியல் ஒத்துழைப்பு, வளர்ச்சி அமைப்பின் (OECD) புதிய கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. அமைப்பின் அனைத்துலக மதிப்பீட்டுத் திட்டத் தேர்வின் ஒரு பகுதியாக, ஒன்றுசேர்ந்து பிரச்சி னைகளுக்குத் தீர்வு காணும் உலகளாவிய தேர்வு 2015ல் நடத் தப்பட்டது. இத்தேர்வில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்தது.

சிங்கப்பூர் 561 புள்ளிகளும், அடுத்த நிலையில் ஜப்பான் 552 புள்ளிகளும், ஹாங்காங் 541 புள்ளிகளும், தென் கொரியா 538 புள்ளிகளும் பெற்றன. ஒன்றுசேர்ந்து பிரச்சினைகளுக் குத் தீர்வு காணும் தேர்வின் முடிவு கள் நேற்று வெளியிடப்பட்டன. ஒத்துழைப்பு தேவைப்படும் புதிய ஒருங்கிணைந்த உலகச் சூழலில் வாழவும் வேலை செய்ய வும் மாணவர்களைத் தயார்ப்படுத் துவதில் ஒவ்வொரு நாடும் எந்த நிலையில் உள்ளன என்பதைப் புலப்படுத்துவதற்காக இத்தேர்வு நடத்தப்பட்டது.