You are here

17 ரயில் நிலையங்களில் சேவை நேரம் குறைப்பு

அடுத்த மாதம் 8ஆம் தேதி யிலிருந்து 31ஆம் தேதி வரை கிழக்கு=மேற்கு ரயில் பாதையில் உள்ள 17 நிலையங்களில் ரயில் சேவைக்கான நேரம் குறைக்கப் படும். தியோங் பாரு எம்ஆர்டி நிலையத்திலிருந்து துவாஸ் லிங்க் எம்ஆர்டி நிலையம் வரையிலும் வடக்கு=தெற்கு ரயில் பாதையில் உள்ள புக்கிட் பாத்தோக், புக்கிட் கோம்பாக் ஆகிய நிலையங்களிலும் வழக்கமான நேரத்துக்கு முன்பு ரயில் சேவை முடித்துக் கொள்ளப் படும். வெள்ளிக்கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் இது நடை முறைப்படுத்தப்படும். ச னி க் கி ழ மை க ளி லு ம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ரயில் சேவை, நேரம் கழித்து தொடங்கும்.

வெள்ளிக்கிழமை இரவிலும் சனிக்கிழமை இரவிலும் ரயில் சேவை 11 மணிக்கு முடியும். சனிக்கிழமை காலையிலும் ஞாயிற்றுக்கிழமை காலையிலும் ரயில் சேவை 8 மணிக்குத் தொடங்கும். அடுத்த மாதம் 10ஆம் தேதி யிலும் 17 தேதியிலும் சம்பந்தப்பட்ட நிலையங்களில் ரயில் சேவை நாள் முழுக்க இயங்காது. சமிக்ஞைப் பணிகளைத் துரிதப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அடுத்த ஆண்டின் முதல் பாதியில் வடக்கு=தெற்கு, கிழக்கு=மேற்கு ஆகிய ரயில் பாதைகளில் உள்ள மற்ற நிலையங் களிலும் ரயில் சேவைக்கான நேரம் குறைக்கப்படும்.

கடந்த புதன்கிழமை ஜூ கூன் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து தொடர்பாக நேற்று நடைபெற்ற இரண்டாவது செய்தியாளர் கூட்டத்தில் நிலப் போக்குவரத்து ஆணையமும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் இணைந்து இந்த அறிவிப்பைச் செய்தன. துவாஸ் வெஸ்ட் நீட்டிப்புக்கும் கிழக்கு=மேற்கு ரயில் பாதையில் உள்ள மற்ற நிலையங்களுக்கும் இடையிலான ரயில் சேவை தனித்து இயங்கும் என்றும் தாலஸ் நிறுவனத்தின் சமிக்ஞை முறைக்கு கிழக்கு=மேற்கு ரயில் பாதை முழுவதுமாக மாற்றியமைக் கப்படும் வரை இந்நிலை தொடரும் என்றும் நிலப் போக்குவரத்து ஆணையம், எஸ்எம்ஆர்டி நிறுவனம், தாலஸ் நிறுவனம் ஆகியவை தெரிவித்துள்ளன.