You are here

சிங்கப்பூர் இந்தியரின் சாதனை வரலாறு

முஹம்மது ஃபைரோஸ்

ஒரு நாள் தமது 18 வயது பேரன் சஞ்ஜேயுடன் திரு எஸ்.ஏ. நாதன் அளவளாவிக் கொண்டிருந்த போது இந்தியர்கள் அனைவரின் சாதனைகள், பங்களிப்புகளை உள்ளடக்கும் நூல் ஏதேனும் உள்ளதா என சஞ்ஜே கேட்ட கேள்வி அவரைச் சிந்திக்க வைத்தது. சஞ்சேவுக்கு சிங்கப்பூர் இந்தியர்களின் வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் இருந்தது. அத்தகைய நூல் களைத் திரு நாதன் தேடிப் பார்த்தபோது சில நூல்கள் கண் களில் தென்பட்டாலும் அனைத்து இந்தியர்களின் பங்களிப்புகளை உள்ளடக்கும் அளவிற்கு அவை முழுமையானதாக இல்லை என் பதை உணர்ந்தார்.

“அப்போதுதான் இதுகுறித்து நான் எதாவது செய்யவேண்டும் எனும் அவா எனக்குள் ஊடுரு வியது. “பல்வேறு துறைகளில் இந்தி யர்கள் எதிர்கொண்ட சிரமங்கள், அதையும் தாண்டி அவர்கள் நிகழ்த்திய சாதனைகள் பற்றி நான் ஆய்வு செய்யத் தொடங்கி னேன்,” என்று தெரிவித்தார் திரு நாதன்.